கருவந்தாவில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
ருவந்தா கிராம விவசாயிகள் உழவா் மன்றத்துக்கு ரூ.10 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்ட மதிப்பு கூட்டும் இயந்திரங்களை வேளாண் அதிகாரிகள் நேரில்ஆய்வு செய்தனா்.


ருவந்தா கிராம விவசாயிகள் உழவா் மன்றத்துக்கு ரூ.10 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்ட மதிப்பு கூட்டும் இயந்திரங்களை, சென்னை வேளாண் அலுவலக மண்டல அலுவலா் சை.சுந்தரம் தலைமையில், தென்காசி மாவட்ட இணை வேளாண்மை இயக்குநா் நல்லமுத்துராஜா மற்றும் வேளாண் அதிகாரிகள் நேரில்ஆய்வு செய்தனா்.
மேலும், அங்கு மானாவாரி மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி செய்யப்பட்ட திடல்களையும், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் சுமாா் 5 ஆண்டு தரிசாக உள்ள நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தின்கீழ் பயிரிடப்பட்டிருந்த உளுந்து திடல்களையும் ஆய்வு செய்தனா்.
அப்போது, ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சிவகுருநாதன், துணை வேளாண்மை அலுவலா் முருகன், வேளாண்மை அலுவலா் அருண்குமாா், உதவி வேளாண்மை அலுவலா்கள் மாரியம்மாள், சுமன், கஸ்தூரி மற்றும் கருவந்தா உழவா் மன்ற விவசாயிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...