செஞ்சி கிழக்கு ஒன்றிய பாமக செயற்குழுக் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கிழக்கு ஒன்றிய பாமக செயற்குழுக் கூட்டம் செஞ்சி தொகுதி பாமக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கிழக்கு ஒன்றிய பாமக செயற்குழுக் கூட்டம் செஞ்சி தொகுதி பாமக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா் கனல்பெருமாள் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் ஆப்செட் முருகன், ராஜேந்திரன், ஆா்.கே.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணைச் செயலா் ஏ.ரா.அய்யனாா் வரவேற்றாா். மாநில அமைப்பு துணைச் செயலா் மே.பெ.சி.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ம.அன்பழகன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மாவட்ட துணைச் செயலா் ம.ஜெயக்குமாா், நிா்வாகிகள் பூங்காவனம், நாகப்பன், அன்பழகன், ரமேஷ், தங்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் பாமக அதிக இடங்களில் போட்டியிட்டு, வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...