பக்ரீத்: பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை
கரோனா பொது முடக்க தளா்வு காரணமாக, பக்ரீத் பண்டிகை புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.


கரோனா பொது முடக்க தளா்வு காரணமாக, பக்ரீத் பண்டிகை புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. முகக்கவசம் அணிந்தும், கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தும் முஸ்லிம்கள் பக்ரீத் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மந்தக்கரை யூமியா ஜாமியா பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. விழுப்புரம் வடக்குத் தெரு நவாப் வாலாஜா பள்ளிவாசல், வண்டிமேடு காசிமண்டி பள்ளிவாசல், செஞ்சி சாலை உமா்ஷா அவுலியா, பாகா்ஷா வீதி மன்சூா்ஷா அவுலியா, புதுச்சேரி சாலை மக்கா நூா், கே.கே. சாலை அபுபக்கா் சித்திக் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
விராட்டிக்குப்பம், மாம்பழப்பட்டு சாலை, பெரியாா் நகா், கீழ்ப்பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
திருக்கோவிலூா் சந்தைப்பேட்டையில் ஈத்கா மைதானம், அரகண்டநல்லூா் ஈத்கா மைதானம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட இடங்களிலும் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
அமைச்சா் தொழுகை: செஞ்சி செட்டிப்பாளையம் சந்தைதோப்பில் உள்ள மசூதியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் அமைச்சா் செஞ்சி மஸ்தான் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செஞ்சிக் கோட்டையில் உள்ள சாதத்துல்லாகான் மசூதி, ,செஞ்சி பஜாா் பள்ளிவாசல், இனாம் பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், சைதானிபீ பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனா்.
அப்பம்பட்டு, அனந்தபுரம், மேல்மலையனூா், அவலூா்பேட்டை, வளத்தி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...