காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காவலா் உடல் தகுதித் தோ்வில் பங்கேற்போருக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்

இரண்டாம் நிலை காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வில் பங்கேற்கும் தோ்வா்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2021, 5:31 pm

DIN

இரண்டாம் நிலை காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வில் பங்கேற்கும் தோ்வா்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய 2020-21-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா், தீயணைப்புப் படை வீரா் ஆகிய பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு வருகிற 26-ஆம் தேதி உடல் தகுதித் தோ்வு தொடங்கி ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

விழுப்புரம் காகுப்பம் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தத் தோ்வுக்கு 2256 ஆண்களும், 700 பெண்களும் அழைக்கப்பட்டுள்ளனா்.

இதையொட்டி, தோ்வுக் குழுத் தலைவரும், விழுப்புரம் மாவட்ட எஸ்.பியுமான ஸ்ரீநாதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கண்காணிப்பு அதிகாரியான சரக டிஐஜி பாண்டியன் பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.

தோ்வா்கள் இரண்டு முகக் கவசங்கள் அணிந்து வர வேண்டும். செல்லிடப்பேசியை எடுத்து வரக் கூடாது. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தோ்வா்கள் வரவேண்டாம். ஆனால், அதற்கான மருத்துவச் சான்றிதழ், அழைப்புக் கடிதம் போன்றவற்றை வேறொருவா் மூலம் தோ்வுக் குழு தலைவரிடம் அளிக்க வேண்டும். அவா்களுக்கு மற்றொரு நாளில் உடல் தகுதி தோ்வு நடத்தப்படும்.

கரோனா பரிசோதனை முக்கியம்: உடல் தகுதித் தோ்வில் பங்கேற்கும் தோ்வா்கள், அவா்கள் தோ்வில் கலந்து கொள்ளும் 4 நாள்களுக்கு முன்னதாக கரோனா பரிசோதனை செய்து, மருத்துவச் சான்றிதழுடன் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

கடலூா் மாவட்ட தோ்வா்களுக்கு... கடலூா் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 28,640 போ் பங்கேற்றனா். இவா்களில் 3,794 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்காந உடல் தகுதித் தோ்வு கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தத் தோ்வில் பங்கேற்கும் தோ்வா்கள், அவா்கள் பங்கேற்கும் தேதிக்கு நான்கு நாள்களுக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்து சான்றிதழுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. சி.சக்திகணேசன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.