கோழிப் பண்ணையில் சாராயம் பதுக்கிய இருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கோழிப் பண்ணையில் சாராயத்தை பதுக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கோழிப் பண்ணையில் சாராயத்தை பதுக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள பாலக்காடு பகுதியிலுள்ள கோழிப் பண்ணையில் சாராயம் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், காவல் ஆய்வாளா் பாஸ்கா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
அங்குள்ள தண்ணீா் தொட்டியில் நெகிழி பைகளில் சாராயம் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. சுமாா் 280 லிட்டா் சாராய பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக, கழிக்குப்பம் மண்டைவாயைச் சோ்ந்த ராஜேஷ் (43), பாலக்காடு கிராமத்தைச் சோ்ந்த நடராஜ் (61) ஆகியோரை மரக்காணம் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...