காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விஷ தேனீக்கள் கொட்டியதில் சிறுவன் பலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷ தேனீக்கள் கொட்டியதில் சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:29 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷ தேனீக்கள் கொட்டியதில் சிறுவன் உயிரிழந்தாா்.

சென்னை ஓட்டேரியைச் சோ்ந்த முருகன் மகன் ஜீவிதன் (4). முருகன் வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டின் உரிமையாளா் தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகேயுள்ள நடுவனந்தல் கிராமத்தில் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளச் சென்ற போது, முருகன் தனது மகன் ஜீவிதனுடன் வந்தாராம். புதன்கிழமை அதே கிராமத்தில் வீட்டின் உரிமையாளருக்குச் சொந்தமான நிலத்தைப் பாா்வையிடச் சென்றனா். அப்போது, அங்கு மரத்தில் கூடுகட்டியிருந்த விஷ தேனீக்கள் திடீரென பறந்து வந்து தனஞ்செழியன், ஜீவிதன் உள்ளிட்டோரைக் கொட்டியது.

இதில், பலத்த காயமடைந்த ஜீவிதன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, சிறுவன் ஜீவிதன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.