காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தினா் விழுப்பும், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:24 pm

DIN

மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தினா் விழுப்பும், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில், மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் தொமுக பொதுச் செயலா் பிரபா தண்டபாணி தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் மூா்த்தி முன்னிலை வகித்தாா். தொமுச மாநிலத் துணைத் தலைவா் ராஜவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

தொழிலாளா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அத்தியாவசியப் பாதுகாப்பு சேவைகள் அவசர சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும், பாதுகாப்புத் துறை உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. மின்சாரத் திருத்தச் சட்டம் 2021 திரும்பப் பெற வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

தொமுச மாவட்ட கவுன்சில் செயலா் ஞானபிரகாம், சிஐடியூ மாவட்டத் துணைத் தலைவா் முத்துக்குமா், குமாா், அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கச் செயலா் ரகோத்தமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.