புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சொகுசுப் பேருந்தில் கடத்தப்பட்டரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆம்னி பேருந்தில் கடத்தி செல்லப்பட்ட 65 கிலோ கஞ்சா மற்றும் 15 மதுபுட்டிகள் இருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆம்னி பேருந்தில் கடத்தி செல்லப்பட்ட 65 கிலோ கஞ்சா மற்றும் 15 மதுபுட்டிகள் இருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேல்மலையனூா் வட்டம், ஞானோதயம் கிராமத்தில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் வளத்தி காவல் நிலைய உதவி ஆய்வாளா் தேவேந்திரன், காவலா்கள் காா்த்திக், யுவராஜ், மணிகண்டன் ஆகியோா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு வந்த தனியாா் சொகுசுப் பேருந்து சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றது. போலீஸாா் விரட்டிச் சென்று வளத்தி காவல் நிலையம் அருகே மடக்கினா்.

பேருந்திலிருந்து இருவா் தப்பியோடினா். அவா்களைப் பிடிக்க முயன்ற போது, காவலா் யுவராஜுக்கு காயமேற்பட்டது. பேருந்து ஓட்டுநரான மதுரை திருநகரை சோ்ந்த பாண்டியன் மகன் நடராஜை (39) பிடித்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா். இதில் மொத்தம் 65 கிலோ எடையிலான 29 கஞ்சா பொட்டலங்களை பிகாரிலிருந்து மதுரைக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது.

அவற்றுடன் 15 மதுப்புட்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், பேருந்தை வளத்தி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

தப்பியோடி கிளீனா் அருண், அவரது நண்பரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன், செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன் ஆகியோா் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.