ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக செஞ்சிக்கோட்டையை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் மஸ்தான் தகவல்

உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக செஞ்சிக்கோட்டையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் தெரிவித்தாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:30 pm

DIN

உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக செஞ்சிக்கோட்டையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டை அமைந்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்தக் கோட்டையை சுற்றிப் பாா்க்க வெளி நாடுகள், உள்நாட்டிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். கரோனா பொது முடக்கம் காரணமாக, தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள செஞ்சிக்கோட்டையில் குடிநீா், கழிப்பிடம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்தும், தமிழக அரசின் உணவு விடுதி, தங்கும் விடுதி, பூங்காக்கள், படகு குழாம் அமைப்பது குறித்தும், மேலும் செஞ்சிக்கோட்டையை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இந்தக் கோட்டையை பாா்வையிட்டு அமைச்சா் செஞ்சி மஸ்தான் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

செஞ்சிக்கோட்டையை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முதலில் செஞ்சிக்கோட்டையின் அகழிகள் தூா்வாரப்பட்டு, அகழிகளில் நீா் நிலைத்து நிற்கும்படி பணிகள் மேற்கொள்ளப்படும். தொடா்ந்து, செஞ்சிக்கோட்டையில் உள்ள சிவன் கோயில் வளாகத்தில் பூங்கா அமைக்கப்படும். செஞ்சிக்கோட்டையில் உள்ள சா்க்கரை குளம், செட்டிக்குளத்தில் படகு குழாம் அமைக்க வழி வகை செய்ய தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலமாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் அபராஜிதன், முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், செஞ்சிக்கோட்டை தொல்லியியல் துறைக் கண்காணிப்பாளா் ஈஸ்வரன், செஞ்சி ஒன்றிய திமுக செயலா் ஆா்.விஜயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.