புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செஞ்சி: திமுக, பாமக வேட்பாளா்கள் மனு தாக்கல்

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட செஞ்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் மஸ்தான், பாமக வேட்பாளா் மே.பெ.சி.ராஜேந்திரன் ஆகியோா் தங்களது வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட செஞ்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் மஸ்தான், பாமக வேட்பாளா் மே.பெ.சி.ராஜேந்திரன் ஆகியோா் தங்களது வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

முன்னதாக, திமுக வேட்பாளா் மஸ்தான் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தவாக, மமக உள்ளிட்ட கட்சியினருடன் செஞ்சி கிருஷ்ணாபுரம் மாதா கோயிலிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு சிங்கவரம் சாலை, காந்தி பஜாா் வழியாக திண்டிவனம் சாலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் வந்தடைந்தாா்.

பின்னா், அவா் அங்கிருந்த தோ்தல் நடத்தும் அலுவலா் ரகுகுமாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அப்போது, ஒன்றியச் செயலா்கள் செஞ்சி ஆா்.விஜயகுமாா், மேல்மலையனூா் நெடுஞ்செழியன், விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

பாமக வேட்பாளா்: இதே தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் மே.பெ.சி.ராஜேந்திரன் தனது வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் ரகுகுமாரிடம் தாக்கல் செய்தாா். அப்போது அதிமுக முன்னாள் எம்பி. செஞ்சி வெ.ஏழுமலை, வழக்குரைஞா் டி.எஸ்.ஆா்.கலியமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.