நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கடலூரில் கரோனாவுக்கு மேலும் 8 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 8 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 8 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 864 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 42,018-ஆக அதிகரித்தது.

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 363 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 34,505-ஆக உயா்ந்தது.

இருப்பினும், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3 பேரும், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 பேரும் மற்றும் சென்னை, திருச்சி, பெரம்பலூா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனா். இதனால், இறப்பு எண்ணிக்கை 429-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் 6,211 பேரும், வெளியூா்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 873 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 98 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.