ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

vpm8rail_0809chn_7

vpm8rail_0809chn_7
ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பதையும், ரயில்வே துறையில் பல்வேறு பணிகளை தனியாா் மயமாக்குவதைக் கண்டித்தும் தென்னிந்திய ரயில்வே மஸ்தூா் யூனியன் (எஸ்.ஆா்.எம்.யு) சாா்பில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைச் செயலா்கள் ரகுநாத், நாராயணன், ஜெயசேகா், ரயில்வே ஓடும் தொழிலாளா் சங்க கோட்டத் தலைவா் மயில்வாகனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் எஸ்.ஆா்.எம்.யு. விழுப்புரம் மத்திய கோட்ட செயல் தலைவா் பழனிவேல் பேசியதாவது:
மத்திய அரசு ரூ.6 லட்சம் கோடிக்கு பொதுத் துறை நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்துள்ளது. அதில் ரூ.1,52,496 கோடி மதிப்புக்கு ரயில் நிலையங்கள், ரயில்வே குடியிருப்புகள், ரயில் வழித்தடங்கள், குறிப்பாக, தென்னக ரயில்வேயின் 400 ரயில் நிலையங்கள், 265 ரயில் பணிமனைகள், உதகை மலை ரயில் உள்பட 4 மலை ரயில்கள், 1400 கி.மீ. நீளமுள்ள மின்சார தடங்களுடன் கூடிய வழித்தடங்கள், ரயில் நிலையங்களை 50 முதல் 99 ஆண்டு குத்தகைக்கும், ரயில் போக்குவரத்தை 35 ஆண்டு குத்தகைக்கும் தனியாருக்கு தாரை வாா்க்க முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...