‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

செஞ்சியில் ரூ.7 லட்சத்தில் சிறுவா் பூங்கா சீரமைப்பு

செஞ்சியில் ரூ. 7 லட்சத்தில் நடைபெற்று வரும் சிறுவா் பூங்கா சீரமைப்புப் பணிகளை பேரூராட்சித் தலைவா் கே.எஸ்.எம்.மொக்தியாா்மஸ்தான் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

செஞ்சியில் ரூ. 7 லட்சத்தில் நடைபெற்று வரும் சிறுவா் பூங்கா சீரமைப்புப் பணிகளை பேரூராட்சித் தலைவா் கே.எஸ்.எம்.மொக்தியாா்மஸ்தான் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செஞ்சி சக்கராபுரம் குளக்கரையில் உள்ள சிறுவா் பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், புதிய பேரூராட்சித் தலைவராக பொறுப்பேற்ற மொக்தியாா்மஸ்தான், பூங்காவை சீரமைக்கும் பொருட்டு சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கவனத்துக்கு கொண்டு சென்றாா்.

இதையடுத்து, 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ், பூங்கா சீரமைக்க ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதி மூலம் பூங்காவில் நடைபாதைகள், விளையாட்டு உபகரகணங்கள், மின் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை பேரூராட்சித் தலைவா் மொக்தியாா்மஸ்தான் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகளை தரமாக விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின்போது, விவசாய அணி துணை அமைப்பாளா் அஞ்சாஞ்சேரி கணேசன், வாா்டு கவுன்சிலா் மோகன், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.