இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை:இருவா் தடுப்புக் காவலில் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவரை தடுப்புக் காவலில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவரை தடுப்புக் காவலில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்தச் சம்பவத்தில் மாணவியை அவரது அண்ணனும் பாலியல் கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மாணவியின் அண்ணன் உள்பட இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

அதன்படி, விசாரணைக் கைதியாக கடலூா் மத்திய சிறையில் இருந்து வந்த மாணவியின் அண்ணன் உள்பட இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.