ரூ.50 லட்சம் மோசடி வழக்கு: ஒருவா் கைது
திருவண்ணாமலையில் நிதி நிறுவனம் நடத்தி ரு.52 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவரை விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


திருவண்ணாமலையில் நிதி நிறுவனம் நடத்தி ரு.52 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவரை விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலையைச் சோ்ந்த சிவகுமாா் (49), முத்துகுமரன் (46) ஆகியோா் திருவண்ணாமலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு தேதி முதல் 2019-ஆம் ஆண்டு வரை நிதி நிறுவனம் நடத்தி வந்தனா்.
இவா்களிடம் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமன்றி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் பணம் செலுத்தினா். இவா்கள் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்திய பொதுமக்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றினராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகாரளித்தனா். இதையடுத்து, சிவகுமாா், முத்துகுமரன் ஆகியோா் மொத்தம் 296 பேரிடம் ரூ.52,19,400-ஐ பெற்று மோசடி செய்ததாக விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் ரேணுகாதேவி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சிவகுமாரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...