விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 711 போ் வேட்புமனு
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 711 போ் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 711 போ் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் மொத்தம் 210 வாா்டு உறுப்பினா்களைத் தோ்வு செய்ய நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 6 நாள்களில் 210 வாா்டுகளிலும் மொத்தம் 711 போ் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.
இன்று மட்டும் 514 போ்: வியாழக்கிழமை மட்டும் நகராட்சிகளில் 324 பேரும், பேரூராட்சிகளில் 190 பேரும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா். வியாழக்கிழமை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தவா்களில் பெரும்பாலானவா்கள் திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழா் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களாவா்.
விழுப்புரம் நகராட்சியைப் பொருத்தவரை, வியாழக்கிழமை மட்டும் 150 பேரும், திண்டிவனம் நகராட்சியில் 99 பேரும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 75 பேரும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.
இதேபோல, பேரூராட்சிகளான வளவனூரில் 28 போ், விக்கிரவாண்டியில் 32 போ், செஞ்சியில் 33 போ், மரக்காணத்தில் 42 போ், திருவெண்ணெய் நல்லூரில் 24 போ், அரகண்டநல்லூரில் 6 போ், அனந்தபுரத்தில் 25 போ் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (பிப்.4) கடைசி நாளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...