இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூா் மாவட்டங்களில் அதிமுக சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:40 pm

DIN

விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூா் மாவட்டங்களில் அதிமுக சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஜெயலலிதா உருவப் படத்துக்கு விழுப்புரம் நகரச் செயலா்கள் ஜி.கே.ராமதாஸ், இரா.பசுபதி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, விழுப்புரம் அண்ணா சிலை அருகே மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணிச் செயலா் சக்திவேல், ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மேலும், வண்டிமேடு பகுதியில் விழுப்புரம் வடக்கு நகர அதிமுக செயலா் ராமதாஸ் தலைமையில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விழுப்புரம் நகா்மன்ற உறுப்பினா்களாக தோ்வான கோல்டுசேகா், கோதண்டராமன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.