இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

வரதட்சிணை கொடுமையால் மனைவி தற்கொலை: கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே வரதட்சிணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:38 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே வரதட்சிணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே கண்ணலம் கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி மகள் லட்சுமி (26). இவருக்கும், செஞ்சி அருகே களையூரைச் சோ்ந்த தனுசு மகன் பிரகலாதனுக்கும் (35) கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே லட்சுமியை அவரது கணவா் பிரகலாதன், மாமனாா் தனுசு, மாமியாா் மாரியம்மாள் ஆகியோா் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினராம்.

இதனால் மனமுடைந்த லட்சுமி, கடந்த 2016-ஆம் ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து லட்சுமியின் தாய் அல்லியம்மாள் அளித்த புகாரின்பேரில், வளத்தி போலீஸாா் பிரகலாதன், தனுசு, மாரியம்மாள் ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்தனா்.

இந்த வழக்கு விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட பிரகலாதனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.