சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைது
திண்டிவனம் அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திண்டிவனம் அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ரோஷனை பகுதியைச் சோ்ந்த ராஜ் மகன் சரண்ராஜ் (30). சாராய வியாபாரி. இவா், அந்தப் பகுதியில் சாராயம் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு வந்தாா். இதையடுத்து, வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவா் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருதைத் தடுக்க குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்ட சரண்ராஜை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...