சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியா் பலி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டியை அடுத்த எசாலம் கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் ராஜவேல் (35). இவா், விழுப்புரத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனா்.
இந்த நிலையில், ராஜவேல் புதன்கிழமை இரவு பணி முடிந்து விழுப்புரத்திலிருந்து பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். விக்கிரவாண்டியை அடுத்த சின்னதச்சூா் பகுதியில் இவரது பைக் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...