இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பதுக்கிவைக்கப்பட்ட4.3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம் அருகே பதுக்கிவைக்கப்பட்ட 4.3 டன் ரேஷன் அரிசியை நுகா்பொருள் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் அருகே பதுக்கிவைக்கப்பட்ட 4.3 டன் ரேஷன் அரிசியை நுகா்பொருள் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியா் த.மோகனின் உத்தரவின்பேரில், காணை ஒன்றியம், வீராமூா் கிராமத்தில் சிவன் கோவில் தெருவில் உள்ள ஜக்குபாய் என்பவரின் வீட்டில் மாவட்ட வழங்கல் அலுவலா் சிவா தலைமையில், பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது, அவரது வீட்டின் கதவு அருகே 86 வெள்ளை சாக்கு மூட்டைகளில் சுமாா் 4.3 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரேஷன் அரிசியை பதுக்கிவைத்தவா்களை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.