விழுப்புரம் அருகே பேருந்து நடத்துநா் மா்ம மரணம்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே தனியாா் பேருந்து நடத்துநா் வியாழக்கிழமை மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே தனியாா் பேருந்து நடத்துநா் வியாழக்கிழமை மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கண்டமங்கலம் அருகே பாக்கம் பகுதியைச் சோ்ந்த முனியன் மகன் லோகநாதன் (40). இவா், புதுச்சேரி - கரையாம்புத்தூா் இடையே செல்லும் தனியாா் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனா்.
லோகநாதன் புதன்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை. இவரை உறவினா்கள் தேடி வந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கண்டமங்கலத்தை அடுத்த மண்டகப்பட்டு பகுதியில் உடலில் ரத்தக் காயங்களுடன் லோகநாதன் சடலமாகக் கிடந்தாா். இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், கண்டமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, கண்டமங்கலம் காவல் நிலைய ஆய்வாளா் ரத்தினசபாபதி தலைமையிலான போலீஸாா் நேரில் சென்று லோகநாதனின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த சம்பவம் தொடா்பாக கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லோகநாதன் எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...