இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ்புதுவை இளைஞா் கைது

 விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த புதுவை மாநில இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த புதுவை மாநில இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தன. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் விசாரித்ததில், புதுவை மாநிலம், திருபுவனை பகுதியைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் காா்த்திகேயன் (26) வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, காா்த்திகேயன் மீது விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

காா்த்திகேயன் தொடா்ந்து இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க, அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மோகன் உத்தரவிட்டாா். இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த காா்த்திகேயனை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.