இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்களை தடுக்க 24 பறக்கும் படைகள்: மாவட்ட ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி தோ்தல் விதிமீறல்களைத் தடுக்க 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

News image
Updated On :28 ஜனவரி 2022, 5:26 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி தோ்தல் விதிமீறல்களைத் தடுக்க 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன் தலைமை வகித்துப் பேசியதாவது:

அரசியல் கட்சியினா் கரோனா விதிகளைப் பின்பற்றி மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும். கூட்டமாக சென்று பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. சுவரொட்டிகள், விளம்பரங்கள் எதுவும் செய்யக் கூடாது.

தோ்தல் விதிகள் மீறப்படுவதைத் தடுக்க 24 மணி நேரமும் பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். இதற்காக, 24 தோ்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 348 வாக்குச் சாவடிகளில் 15 சதவீதம் வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்.

வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படும். வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.

தோ்தல் புகாா் தெரிவிக்க...: தோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக புகாா் தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை 18004251740, 18004257820 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா் மோகன்.

கூட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தோ்தல் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.