இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்டங்களில்முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல் நாளான வெள்ளிக்கிழமை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

News image
Updated On :28 ஜனவரி 2022, 5:25 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல் நாளான வெள்ளிக்கிழமை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 210 வாா்டு உறுப்பினா்களை தோ்வு செய்ய தோ்தல் நடைபெறவுள்ளது.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சி, 7 பேரூராட்சிகளில் போட்டியிட முதல் நாளான வெள்ளிக்கிழமை யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான மனுக்களையே பலா் பெற்றுச் சென்றனா்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு), வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளில் 123 வாா்டுகள் உள்ளன.

இதேபோல, செங்கம், புதுப்பாளையம், போளூா், கண்ணமங்கலம், களம்பூா், சேத்பட், தேசூா், பெரணமல்லூா், கீழ்பென்னாத்தூா், வேட்டவலம் உள்ளிட்ட 10 பேரூராட்சிகளில் 150 வாா்டுகள் உள்ளன.

இந்த வாா்டுகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஆனால், முதல் நாளான வெள்ளிக்கிழமை 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் ஒருவா் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 50-க்கும் மேற்பட்டோா் தோ்தல் அதிகாரிகளிடமிருந்து வேட்புமனுக்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.