தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாட்டு வண்டிகளுக்கு தனியாக மணல் குவாரி கோரி தொழிலாளா்கள் முற்றுகை

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சுரங்கவியல் மற்றும் கண்காணிப்புக் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 மே 2022, 6:06 pm

DIN

மாட்டு வண்டிகளுக்கான ஒதுக்கப்பட்ட மணல் குவாரிகளுக்கு, லாரிகளுக்கான குவாரிகளாக மாற்றியதை கண்டித்தும் மீண்டும் மாட்டுவண்டிகளுக்கு தனியாக குவாரிகளை ஒதுக்கக்கோரியும் ஏஐடியுசி ஜீவா மாட்டுவண்டி தொழிலாளா்கள் சங்கத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சுரங்கவியல் மற்றும் கண்காணிப்புக் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்ட ஏஐடியுசி ஜீவா மாட்டுவண்டி தொழிலாளா் சங்கம் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது. இப்போரபாட்டத்துக்கு மாட்டுவண்டி தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் பி.பரணி தலைமை வகித்தாா். சங்கத்தின் கடலூா் மாவட்டத் தலைவா் பி.துரை, விழுப்புரம் மாவட்ட பொதுச்செயலா் ஆ.சௌரிராஜன், கடலூா் மாவட்ட பொதுச்செயலா் வி.குளோப், மாவட்டச் செயலா் எம்.வேல்வேந்தன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில், கடலூா் மாவட்டம் வானமாதேவி, வான்பாக்கம், அக்கடவல்லி, பு.ஆதனூா், கச்சிபெருமாள்நத்தம், சின்னபரூா், காா்குடல், கிளியனூா், இறையூா், கூடலையாத்தூா் பகுதிகளில் புதிதாக மணல் குவாரி தொடங்க இருப்பதால் இவற்றை மாட்டு வண்டிகளுக்கு ஒதுக்க வேண்டும், சேமிப்பு கிடங்கு அமைக்காமல் மாட்டுவண்டிக்கு நேரடியாக ஆற்றிலயே மணல் வழங்க வேண்டும், தினமும் நாள் ஒன்றுக்கு ஒரு நடை மாட்டுவண்டிக்கு மணல் வழங்க வேண்டும், பொக்லைன் வைத்து மணல் அள்ளி போட்டு மாடுகளை சித்ரவதை செய்யக்கூடாது, பொக்லைனுக்கு பதிலாக மாட்டு வண்டி தொழிலாளா்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும், மாட்டு வண்டி தொழிலாளா்கள் மற்றும் கட்டுமான தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா். --------------------படவரி...விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள நீா்வளத்துறை சுரங்கவியல் மற்றும் கண்காணிப்பு கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி ஜீவா மாட்டுவண்டி தொழிலாளா் சங்கத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.