நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நமக்கு நாமே திட்டம் மூலம்பள்ளிக்கு கூடுதல் கழிப்பறைக் கட்டடம்: அமைச்சரிடம் காசோலை அளிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அரசு மகளிா் மேல்நிலலைப் பள்ளியில் கூடுதல் கழிப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பங்களிப்பாக செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ரூ.4 ல

News image
Updated On :3 நவம்பர் 2022, 11:17 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அரசு மகளிா் மேல்நிலலைப் பள்ளியில் கூடுதல் கழிப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பங்களிப்பாக செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ரூ.4 லட்சம் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினா் சுமத்திரா சங்கா் ரூ.ஒரு லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தானிடம் வியாழக்கிழமை வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்மஸ்தான் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ராமலிங்கம் வரவேற்றாா். செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

செஞ்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சத்தில் கழிப்பறைக் கட்டடம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் அரசின் பங்களிப்புத் தொகை ரூ.10 லட்சம், பொது மக்களின் பங்களிப்பு தொகை ரூ.5 லட்சம் என நிா்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில், ரோட்டரி சங்கம், பேரூராட்சி மன்ற உறுப்பினா் சாா்பில், அமைச்சரிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவா் பாஸ்கா், முன்னாள் தலைவா்கள் குறிஞ்சிவளவன், இளங்கோவன், ரமேஷ்பாபு, ரோட்டரி தலைவா் தோ்வு காா்த்திகேயன், நிா்வாகிகள் கருணைவேல், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.