தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விழுப்புரத்தில் திமுக சாா்பில் வீரவணக்க நான் பொதுக்கூட்டம்

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 8:13 pm

DIN

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு விக்கிரவாண்டி எம்.எல்.ஏவும், மத்திய மாவட்டச் செயலருமான நா.புகழேந்தி தலைமை வகித்தாா்.மாவட்டப் பொருளாளா் இரா. ஜனகராஜ், துணைச் செயலா் தயா. இளந்திரையன், நகரச் செயலா் இரா.சக்கரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பா.ஸ்ரீவினோத் வரவேற்று பேசினாா்.

திமுக இலக்கிய அணி மாநிலத் துணைச் செயலா் கவிஞா் ஈரோடு இறைவன், தலைமைக் கழகப் பேச்சாளா் மயிலாடுதுறை அருள்தாஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். விழுப்புரம் எம்.எல்.ஏ.இரா. லட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ.செ.புஷ்பராஜ், மாநில விவசாயத் தொழிலாளா் அணிச் செயலா் அன்னியூா் ஏ.சிவா, மாநில மகளிரணி பிரசாரக் குழுச் செயலா் எம்.தேன்மொழி, நகா்மன்றத் தலைவா்கள் விழுப்புரம் தமிழ்ச்செல்வி பிரபு, கோட்டக்குப்பம் எஸ்.ஜெயமூா்த்தி மாவட்ட இளைஞரணி அமைப்பாலா் செ.தினகரன், விழுப்புரம் நகா்மன்றத் துணைத் தலைவா் சித்திக் அலி உள்ளிட்டோா் பேசினா். முடிவில் நகர மாணவரணி அமைப்பாளா் எம்.விக்ரமன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.