விழுப்புரம்: மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜிநாமா!

திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முரளி என்கிற ரகுராமன். இவர் ஸ்ரீராம் அறக்கட்டளையின் நிறுவனராக உள்ளார்.
விழுப்புரம்: மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜிநாமா!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் பதவியிலிருந்து முரளி என்கிற ரகுராமன் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முரளி என்கிற ரகுராமன். இவர் ஸ்ரீராம் அறக்கட்டளையின் நிறுவனராக உள்ளார். இந்த அறக்கட்டளையின் சார்பில் கடந்த 5-ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் 39 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

அதிமுக பிரமுரகராக உள்ள முரளி என்கிற ரகுராமன், விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் பொறுப்பிலும் உள்ளார்.

இந்நிலையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டதாகக் கூறி முரளி என்கிற ரகுராமனை கட்சியிலிருந்து நீக்கிஅதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகிலுள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் பதவியிலிருந்து தான் ராஜிநாமா செய்து அதற்கான கடிதத்தை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ரவிச்சந்திரனிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com