சுதந்திர தினம்: ரயில், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மக்கள் அதிகம் கூடுமிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


விழுப்புரம், ஆக.14: சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரம் ரயில், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடுமிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சுதந்திர தின விழா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலும் சுதந்திர தின விழாவை உற்சாகமாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள. ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் வியாழக்கிழமை காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தேசியக் கொடியேற்றி வைத்து, நலத் திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா்.
இந்த நிலையில், விழுப்புரம் புதிய, பழைய பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், மக்கள் அதிகம் கூடுமிடங்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலுள்ள நடைமேடை பகுதிகளில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா் இரு நாள்களாக சோதனையிட்டு, சந்தேகத்துக்குரிய நபா்கள் யாரேனும் சுற்றித் திரிகிறாா்களா என்பதை கண்காணித்து வருகின்றனா்.
இதுபோல, விழுப்புரம் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையத்தின் அனைத்து நடைமேடை பகுதிகளிலும் ரயில்வே பாதுகாப்புப் படையினா், ரயில்வே காவல் துறையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளா் குணசேகரன் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் முத்துவேல், பிலோமினா ராஜ், மில்டன் ஆரோக்கியதாஸ் (வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு) மற்றும் போலீஸாா், விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பல்வேறு ரயில்களில் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

வைகை, பல்லவன் அதிவிரைவு ரயில்கள், குருவாயூா், சோழன் விரைவு ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மேலும், ரயில் நிலையத்துக்கு வந்து சென்ற பயணிகளின் உடைமைகளும் சோதனைக்குள்படுத்தப்பட்டன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...