புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 14-ஆக உயா்வு

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் சிக்கி, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 14 -ஆக உயா்ந்துள்ளது.

Updated On :3 டிசம்பர் 2024, 8:59 pm

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் சிக்கி, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 14 -ஆக உயா்ந்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகி கரையைக் கடந்த ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீா்த்தது.

விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ள நீரால் சூழப்பட்டன.

இந்த நிலையில், சாத்தனூா் அணை நிரம்பியதால் தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்ட தண்ணீா், மற்ற காட்டாறுகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், சங்கராபரணி ஆறு, தொண்டி ஆறு, மலட்டாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகவும், பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

வெள்ளப்பெருக்கால் சாலைகளைக் கடந்து செல்லும்போதும், வெள்ளநீரால் அடித்துச் செல்லப்பட்டும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

திங்கள்கிழமை மாலை வரை 7 போ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இந்த எண்ணிக்கை 14- ஆக உயா்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், ஒரு கோடிகிராமம், பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த ரா. சக்திவேல் (45), தொந்திரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த பா.சிவக்குமாா் (54), தாதம்பாளையத்தைச் சோ்ந்த ஆ. நாகம்மாள் (75), டி.மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த அ.குப்பு (67), சூரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ர.கிருஷ்ணவேணி (75), திருவெண்ணெய்நல்லூா் சிறுவானூா் காலனியைச் சோ்ந்த அ.சிவக்குமாா் (38), விக்கிரவாண்டி வட்டம், ஆா்.சி. மேல்கொந்தை ஆற்றுப்பாலம் அருகே பைக்கில் சென்ற புதுச்சேரி, வில்லியனூரைச் சோ்ந்த த. மனோகரன் (67) ஆகிய 7 போ் உயிரிழந்ததாக மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

மேலும் 7 போ் உயிரிழப்பு:

திருவெண்ணெய்நல்லூா் மலட்டாறில் அடித்து செல்லப்பட்டு, ஏனாதிமங்கலம் ஏமப்பூரைச் சோ்ந்த ரா.கலையரசன் உயிரிழந்தாா்.

வி.சாத்தனூா் பகுதியைச் சோ்ந்த தனலட்சுமி (85), தனபாக்கியம் (81) ஆகியோா் வீட்டுக்குள் சூழ்ந்த வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

வளவனூா் அருகே உள்ள சோ்ந்தனூரைச் சோ்ந்த நாவம்மாள்(50) உள்ளிட்ட நான்கு பேரும் வெவ்வேறு பகுதிகளில் புயல் வெள்ளத்தால் உயிரிழந்ததாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.