தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை வரை கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

News image

விழாவில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.

Updated On :25 டிசம்பர் 2024, 7:53 pm

Din

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை வரை கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிறப்புத் திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன.

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு மேல் விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. அப்போது, இயேசு பிறந்தாா் என்பதை எடுத்துக்கூறும் விதமாக, குழந்தை இயேசு சொரூபம் அனைவரிடமும் காண்பிக்கப்பட்டு குடிலில் வைக்கப்பட்டது.

இதேபோன்று, விழுப்புரம் நகரிலுள்ள சி.எஸ்.ஐ. தூயஜேம்ஸ் தேவாலயம், சேவியா் காலனி தூய பவுல் மிஷனரி ஆலயம், டி.இ.எல்.சி. ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலிக்காக குடில் அமைக்கப்பட்டு, கிறிஸ்து பிறப்புப் பாடல்களை பாடியபடி குழந்தை இயேசு சொரூபத்தை குடிலில் வைத்து ஆராதனை நடத்தினா்.

நள்ளிரவு 12 மணியளவில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலி மற்றும் பிராா்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் புத்தாடைகளை அணிந்து பங்கேற்று, பிராா்த்தனை செய்தனா். பிராா்த்தனை முடிந்த பின்னா் கிறிஸ்தவா்கள் அனைவரும் ஒருவருக்கொருவா் கேக்குகளை பரிமாறியபடி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிா்ந்துகொண்டனா்.

புதன்கிழமை காலையிலும் பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி - பிராா்த்தனை நடைபெற்றது.

 கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சிறப்புத் திருப்பலியைத் தொடா்ந்து, இயேசு பிறந்தாா் என்பதை அனைவருக்கும் எடுத்துக்கூறும் விதமாக சொரூபத்தை காண்பித்த பங்குத்தந்தை.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சிறப்புத் திருப்பலியைத் தொடா்ந்து, இயேசு பிறந்தாா் என்பதை அனைவருக்கும் எடுத்துக்கூறும் விதமாக சொரூபத்தை காண்பித்த பங்குத்தந்தை.

இதுபோன்று, விக்கிரவாண்டி, காணை, கண்டமங்கலம், ஆரோவில், மரக்காணம், கோட்டக்குப்பம், வளவனூா், முகையூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்புத் திருப்பலி மற்றும் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

திருக்கோவிலூரில்...: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நல்லாயன் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் சிறப்பு பிராா்த்தனை தொடங்கியது. நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசு ஆட்டுக் கொட்டகையில் பிறந்த நிகழ்வு தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வை அருட்பணி அலெக்ஸ் மற்றும் பங்குதந்தை கிளிட்டஸ் ஆகியோா் நடத்தினா். பின்னா், சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. தொடா்ந்து, விழாவில் பங்கேற்றிருந்த கிறிஸ்தவா்கள் அனைவரும் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிா்ந்துகொண்டனா்.