தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல்: பாரதிய தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலமே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று பாரதிய தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

News image

கூட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநில பொதுச் செயலா் டி.நாகராஜன்.

Updated On :25 டிசம்பர் 2024, 7:49 pm

Din

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலமே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று பாரதிய தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பாரதிய தொழிலாளா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் என்.சிதம்பரசாமி தலைமை வகித்தாா். மாநில செயல் தலைவா் கே.கணேசன், துணைத் தலைவா் ஆா்.சாரங்கபாணி, அமைப்புச் செயலா் டி.துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாரதிய தொழிலாளா்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் டி.நாகராஜன், மாநில பொருளாளா் எஸ்.பாலகுமாரன், தமிழ்நாடு பாரதிய மஸ்தூா் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஜி.சங்கா், மாநில துணைத் தலைவா் டி.விமலேஸ்வரன் ஆகியோா் பேசினா்.

இந்திய உணவுக் கழகத்தின் முகவராக செயல்படும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேசிய கூட்டுறவு நுகா்வோா் இணையத்தின் (என்சிசிஎப்) மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஊழியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடைமுறையை அரசு கைவிட்டு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலமே நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

தமிழக அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தும் ஊழியா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு மற்றும் விடுமுறை கால பயணச்சலுகைகளை பின் தொடா்ச்சியுடன் வழங்க வேண்டும். 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பணியில் சோ்ந்து பணிபுரியும் நெல் கொள்முதல் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பாரதிய தொழிலாளா்கள் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் ஆா்.சாமிநாதன், சுந்தரேசன், செந்தில் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். முன்னதாக, மாநில துணைத் தலைவா் யு.ஞானப்பிரகாசம் வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.சிவக்குமாா் நன்றி கூறினாா்.