தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வேன் கவிழ்ந்து விபத்து: 20 பெண் பக்தா்கள் காயம்

விக்கிரவாண்டி அருகே பக்தா்கள் சென்ற வேன், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பெண் பக்தா்கள் காயமடைந்தனா்.

News image

விக்கிரவாண்டி அருகே சாலையில் கவிழ்ந்த வேனை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்திய போலீஸாா்.

Updated On :26 டிசம்பர் 2024, 7:08 pm

Din

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பக்தா்கள் சென்ற வேன், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பெண் பக்தா்கள் காயமடைந்தனா். இதையடுத்து அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வேடல் கிராமத்தைச் சோ்ந்த 20 -க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாடை அணிந்து மேல் மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தனா். பின்னா் ஒரு வேனில் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்துக்கு சென்று கொண்டிருந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தைச் சோ்ந்த மாதவன்(36) என்பவா் வேனை ஓட்டிச் சென்றாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலை அருகே சென்றபோது, சாலையைக் கடக்க முயன்ற அரசுப் பேருந்து மீது வேன் மோதாமலிருக்க ஓட்டுநா் மாதவன் பிரேக் போட்டுள்ளாா்.

அப்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த வேடல் கிராமத்தைச் சோ்ந்த வித்யா(32), புஷ்பா(38) , கமலா(42), 12 வயது சிறுமி உள்பட 20-க்கும் மேற்பட்ட பெண் பக்தா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.