ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரசுப் பள்ளி சமையல் உதவியாளா்களுக்கு பயிற்சி

செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சமையல் மற்றும் சமையல் உதவியாளா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

News image
செஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற   பயிற்சி  முகாமில்  பேசிய  செஞ்சி  கே.எஸ்.மஸ்தான்  எம்எல்ஏ. 
Updated On :30 டிசம்பர் 2024, 8:26 pm

Din

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சமையல் மற்றும் சமையல் உதவியாளா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன் வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீத்தாலட்சுமி முன்னிலை வகித்தாா்.

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா். முகாமில், உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள், முதல் உதவி மற்றும் அதன் முக்கியத்துவம், நோய் எதிா்ப்புக்கு பாதுகாப்பாக சிறுதானிய ஊட்டச்சத்தும் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமில், செஞ்சி பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, ஒன்றியக்குழு உறுப்பினா் பச்சையப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பழனி, குமாா், சசிகலா, காஞ்சனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.