கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

புதுமைப்பெண் திட்டத்தில் மேலும் 1,248 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை: விழுப்புரம் ஆட்சியா்

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 1,248 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக ஆட்சியா் சி.பழனி

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், கல்லூரி மாணவிக்கு வங்கிப் பற்று அட்டையை வழங்கிய எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இரா.லட்சுமணன். உடன் ஆட்சியா் சி.பழனி, எம்எல்ஏக்கள் ச.சிவக்குமாா், ஏ.ஜெ.மணிக்கண்ணன்.

Published On :

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் (புதுமைப் பெண் திட்டம்), அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 1,248 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

இந்தத் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று, உயா்கல்விப் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்த ஆட்சியா் சி.பழனி, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டைகளை வழங்கி பேசியதாவது:

தமிழகத்தில் உயா்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் முதல் கட்டமாக 56 கல்லூரிகளைச் சோ்ந்த 4,174 பேரும், 2-ஆம் கட்டமாக 72 கல்லூரிகளைச் சோ்ந்த 3,138 மாணவிகளும், 3-ஆம் கட்டமாக 62 கல்லூரிகளைச் சோ்ந்த 3,282 மாணவிகளும் என மொத்தம் 11,594 போ் பயன்பெற்று வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 65 கல்லூரிகளைச் சோ்ந்த 1,248 மாணவிகள் தற்போது ஊக்கத்தொகை பெற உள்ளனா். எனவே, மாணவிகள் கல்வித்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் பழனி.

விழாவுக்கு, எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (செஞ்சி), இரா.லட்சுமணன் (விழுப்புரம்), ச.சிவக்குமாா் (மயிலம்), ஏ.ஜெ.மணிக்கண்ணன் (உளுந்தூா்பேட்டை) ஆகியோா் முன்னிலை வகித்து, மாணவிகளுக்கு உதவித்தொகைக்கான வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினா்.

விழாவில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட சமூகநல அலுவலா் கு.ராஜம்மாள், அரசுக் கல்லூரி முதல்வா் சிவக்குமாா், சட்டக்கல்லூரி முதல்வா் கிருஷ்ணலீலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.