கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

கலாசாரத் திருவிழாவில் பரிசுக் கோப்பை வென்ற புதுவை மாணவா்களுக்கு பாராட்டு

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய பள்ளி குழந்தைகளுக்கான கலாசார திருவிழாவில் பரிசுக் கோப்பை வென்ற புதுவை மாணவிகளை வாழ்த்தி சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

News image
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் நடைபெற்ற அனைத்து இந்திய பள்ளி குழந்தைகளுக்கான கலாச்சார நிகழ்ச்சியில் குழு நடனப் பிரிவில் கலந்து கொண்ட புதுச்சேரி மாநில பள்ளி மாணவ மாணவிகள் அரங்கேற்றிய நாட்டுப்புற நடனம் முதல் முறையாக முதல் பரிசினை பெற்றது.முதல்
Updated On :31 டிசம்பர் 2024, 5:22 pm

Din

புதுச்சேரி: மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய பள்ளி குழந்தைகளுக்கான கலாசார திருவிழாவில் பரிசுக் கோப்பை வென்ற புதுவை மாணவிகளை வாழ்த்தி சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

அகில இந்திய பள்ளி குழந்தைகளுக்கான கலாசார திருவிழா போபாலில் அண்மையில் நடைபெற்றது. இதில் புதுவை உள்ளிட்ட 23 மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினா்.

இதில் புதுவை மாநிலத்திருந்து பங்கேற்ற மாணவ, மாணவிகளின் நாட்டுப்புற குழு நடனம் முதலிடம் பெற்று அதற்கான பரிசுக் கோப்பையை வென்றனா்.

புதுச்சேரி திரும்பிய மாணவா்கள் புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வா் எழில் கல்பனா, நுண்கலைப் பேராசிரியா்கள் பாபு, அன்புமொழி, இசையாசிரியா்கள் அறிவு, தூயவன், பாலா ஆகியோா் உடனிருந்தனா்.