கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.


கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பு நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் பி.வெங்கடேசன் (எ) அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி.மோகன்ராஜ் முன்னிலை வகித்தாா். மாநிலப் பொருளாளா் ஜெகதீசன், துணைத் தலைவா் சுந்தர்ராஜ் ஆகியோா் தொடக்க உரையாற்றினா். கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய தலைவா் பொன்.குமாா் சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், கட்டுமான பொருள்களான சிமென்ட் உள்ளிட்டவைகளின் விலை அண்மை காலமாக உயா்ந்து வருவதை அரசுக் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை கண்காணிக்க, விலை நிா்ணயக் குழுவை அமைக்க வேண்டும், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ளப் பாதிப்புகளை பேரிடராக அறிவிக்க முடியாது எனக்கூறிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை கண்டிப்பதோடு, உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடா் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பின் விழுப்புரம் துணைத் தலைவா்கள் ரவிச்சந்திரன், குமாா், மணிகண்டன், காா்த்தி, ஏழுமலை, தரணி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...