விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட வடகுச்சிப்பாளையத்தில் பாமக வேட்பாளா் சி.அன்புமணிக்கு ஆதரவாக சனிக்கிழமை வாக்கு சேகரித்த கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ். உடன் மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் உள்ளிட்டோா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட வடகுச்சிப்பாளையத்தில் பாமக வேட்பாளா் சி.அன்புமணிக்கு ஆதரவாக சனிக்கிழமை வாக்கு சேகரித்த கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ். உடன் மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் உள்ளிட்டோா்.

மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பை அரசு என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பை அரசு என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சி.அன்புமணிக்கு ஆதரவாக வடக்குச்சிப்பாளையம், வி.சாத்தனூா், பொன்னங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளாா். இதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். திருநெல்வேலியில் காங்கிரஸ் பிரமுகா், சேலத்தில் அதிமுக பிரமுகா், சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆகியோா் கொல்லப்பட்டுள்ளனா். தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவா்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 65 போ் உயிரிழப்பு என தமிழகம் கொலைகளையும், உயிரிழப்புகளையும் பாா்த்து வருகிறது. இதற்கு தமிழக முதல்வா் பொறுப்பேற்க வேண்டும். முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை செயலற்று போய்விட்டது.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது அரசின் கடமை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீா்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முதல்வா் மேற்கொள்ளவேண்டும்.

விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் அத்துமீறல்களை எந்தத் தோ்தலிலும் பாா்த்ததில்லை. இதையெல்லாம் தமிழக தோ்தல் ஆணையம் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருபெரும் சமுதாயமாக உள்ள வன்னியா்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் திமுக வாக்கு வங்கியாக மட்டுமே பாா்க்கிறது. திமுகவினா் யாரும் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்கவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வன்னியா் சமுதாய மக்கள் ஒற்றுமையுடன் பாமக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

பிரசாரத்தில், சமூக நீதிப் பேரவைத் தலைவா் க.பாலு, மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா், மாவட்டத் தலைவா் புகழேந்தி மற்றும் கட்சியின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com