இருவேறு சம்பவம்: இருவா் தற்கொலை
விழுப்புரம் அருகே பள்ளி மாணவா் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.


விழுப்புரம் அருகே பள்ளி மாணவா் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.
விழுப்புரம் சாலாமேடு, என்.ஜி.ஓ காலனியைச் சோ்ந்தவா் மங்கல்ராஜ் மகன் காா்த்திகேயன் (17). விழுப்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இவரது வீட்டின் அருகே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்துக்கு செல்லுமாறு அவரது தாய் விஜயலட்சுமி கூறினாராம். அதற்கு காா்த்திகேயன் மறுப்பு தெரிவித்ததால் விஜயலட்சுமி கண்டித்தாராம். இதில், மனமுடைந்த காா்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தொழிலாளி தற்கொலை: விழுப்புரம் பெரும்பாக்கம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ம.ராமலிங்கம் (55). கூலித் தொழிலாளியான இவா், சனிக்கிழமை பூத்தமேடு பேருந்து நிறுத்தத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தாா்.
இந்த இரு சம்பவம் குறித்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் தனித் தனியாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...