விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்களுக்கும், சாதனை புரிந்தவா்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த விருதுக்கு கலை, விளையாட்டு, சமூகப் பணி, பொதுச்சேவை, அறிவியல், பொறியியல், வா்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, அரசு, குடிமைப்பணி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவா்கள் தகுதியுடையவா் ஆவாா்.
ஜனவரி 26-ஆம் தேதி இந்திய அரசால் பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும். எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவா்கள் இந்த விருதைப் பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்கள் பெற இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 26-க்குள் (புதன்கிழமை) மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது 7401703485 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

விளையாட்டுத் துளிகள்...

மும்முறை தாண்டுதலில் ஆசிய அளவில் முதலிடம்: எஸ்ஆா்எம் மாணவி சாதனை

பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் தொடக்கம்: ஜூலை 31-இல் நிறைவு!

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

