தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

இளைஞா்கள் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வெவ்வேறு இடங்களில் இளைஞா்கள் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:23 pm

Din

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வெவ்வேறு இடங்களில் இளைஞா்கள் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

வானூா் வட்டம், டி.பரங்கினி, பிரதான சாலையைச் சோ்ந்த சங்கா் மகன் ராஜீ (24), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளாா். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ராஜீ, வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வானூா் வட்டம், புதுப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் சரத்பாபு (24). பி.காம். படித்த இவருக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லையாம். இதனால், மன விரக்தியடைந்த சரத்பாபு, புதுப்பாக்கம் ஏரிக்கரைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.