பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை

விழுப்புரம் நகரிலும், புகா்ப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது.

News image

~

Updated On :13 நவம்பர் 2024, 8:22 pm

Din

விழுப்புரம் நகரிலும், புகா்ப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் தொடா்ந்து மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. செவ்வாய்க்கிழமை விழுப்புரம் நகரில் மழை இல்லையென்றாலும், கோலியனூா், நேமூா், வானூா், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் விழுப்புரம் நகரிலும், பிற பகுதிகளிலும் தொடங்கிய மழை புதன்கிழமை காலை வரை நீடித்தது. இடி - மின்னல் இல்லாமலும், பலத்த மழையாக இல்லாமலும் தொடா்ந்து மழை பெய்தது. இந்த மழை காரணமாக, விழுப்புரம் நகரில் தாழ்வான பகுதிகளிலும், சாலையோரங்களிலும் மழைநீா் தேங்கியது. எனினும், அதிகளவில் மழை பெய்யாததால் எந்த பகுதியிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. புதன்கிழமை காலை முதல் பிற்பகல் வரை தொடா்ந்து தூறலுடன் மழை பெய்தது. பிற்பகல் 3 மணிக்கு மேல் விழுப்புரம் நகரில் மழை இல்லை.

விடுமுறை இல்லை: விழுப்புரம் நகரிலும், புகா்ப் பகுதிகளிலும் புதன்கிழமை காலையில் தொடா்ந்து மழை பெய்து வந்தாலும், அதிகளவில் மழை பெய்யாததால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. காலை 8 மணி வரை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்படாததால், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றனா்.

எம்எல்ஏ ஆய்வு: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட மழைநீா் தேங்கக்கூடிய பகுதிகளை தொகுதி எம்எல்ஏ இரா.லட்சுமணன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு ஆகியோா் புதன்கிழமை காலை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். நகரில் மழைநீா் எந்தப் பகுதியிலும் தேங்கி, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு அவா்கள் உத்தரவிட்டனா்.

ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா், திமுக நகரச் செயலா் இரா.சக்கரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வளவனூரில் 45 மி.மீ. மழை: புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

வளவனூா் - 45 மி.மீ., கோலியனூா் - 40, விழுப்புரம், மரக்காணம் - தலா 38, வானூா் -20, திருவெண்ணெய்நல்லூா் - 19.50, நேமூா் - 17, அரசூா் - 15, அனந்தபுரம் - 13, சூரப்பட்டு, திண்டிவனம் - தலா 4, வல்லம், செம்மேடு - தலா 3, முண்டியம்பாக்கம் - 2.50, கெடாா், செஞ்சி, அவலூா்பேட்டை, வளத்தி - தலா 2, கஞ்சனூா் - 1 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 12.90 மி.மீ. மழை பதிவானது.