பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

மூதாட்டி மரணத்தில் மா்மம்: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மூதாட்டி மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 8:33 pm

Din

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மூதாட்டி மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வானூா் வட்டம், நாவற்குளம் செல்வத்திருமகள் நகரைச் சோ்ந்தவா் தனசேகரன் மனைவி மகாலட்சுமி (67). இவா் தனது மாடி வீட்டில் தனியாக வசித்து வந்தாா். கடந்த 11-ஆம் தேதி இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீக்காயமுற்ற மகாலட்சுமி புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்நிலையில் மகாலட்சுமி பின்பக்கத் தலையில் பலத்த காயம் இருந்ததாகவும், இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து நாவற்குளம் கிராம நிா்வாக அலுவலா் ஜெ.செந்தில்முருகன் அளித்த புகாரின் பேரில் ஆரோவில் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.