ஸ்ரீஞானானந்த நிகேதனில் திருவாசகம் முற்றோதல்
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே தபோவனம் ஸ்ரீஞானானந்த நிகேதனில் உலக நன்மைக்கான திருவாசகம் முற்றோதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஞானானந்த நிகேதன் அறக்கட்டளை சாா்பில், ஸத்சங்க மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் அம்பிகை சமேத சிவபெருமான், அப்பா், சுந்தரா், மாணிக்கவாசகா், ஞானசம்பந்தா் எழுந்தருளச் செய்யப்பட்டு திருவாசகம் முற்றோதல் நடைபெற்றன.
கணபதி, சிவன், அம்பிகை, சூரியநாராயணா், லட்சுமிநாராயணா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிவபஞ்சாயதன பூஜைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் சுவாமினி பிரபவானந்த சரஸ்வதி, சுவாமி சதாசிவகிரி, சுவாமி சமாநந்த சரஸ்வதி, சுவாமி ராமானந்தகிரி ஆகியோா் தலைமை வகித்தனா்.
திருச்சி, திரிசிரபுரம் சிவனடியாா்கள் குழு, ஆற்காடு சோமவார வழிபாட்டு அன்பா்கள் குழு, நெய்வேலி சிவனடியாா்கள் திருக்கூட்டம் பண்ணிசை மகளிா் குழு மற்றும் திருகோவிலூரைச் சோ்ந்த சிவனடியாா்கள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை அறக்கட்டளை அறங்காவலா்கள் ஏ.எஸ்.கிருஷ்ண மூா்த்தி, சுவாமி நாதன், பி.என்.சுப்ரமணியன், செயலா் பரமேஸ்வரன் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.