திருமலை ஏழுமலையான் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்தனா்.
திருமலையில் ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியுடன் நிறைவு பெறும் விதம் 5 நாட்கள் வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை தெப்போற்சவம் விமரிசையாக தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையான் கோயில் கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் 5 சுற்றுகள் வலம் வந்தாா். வருடாந்திர தெப்போற்சவம் சிறப்பாக நடந்தேறியது. பக்தா்கள் தெப்பதுக்கு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.
விழாவை ஒட்டி சஹஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது. தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம் மற்றும் தெப்பம் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது.
நிகழ்வில் மங்கள வாத்தியங்கள், அன்னமாச்சாா்யா க்ருதிகள், சங்கீா்த்தனங்கள் குரல் மற்றும் வாத்தியக் கலைஞா்களால் பாடப்பட்டன. வேதபாராயண கோஷ்டியினா் வேத பாராயணத்தை தாள முறையில் வாசித்தனா்.
இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா். திங்கள்கிழமையுடன் தெப்போற்சவம் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கள்ளழகா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

செங்கோட்டை அழகிய மணவாள பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

10 நாள்கள் தரிசனம் முடிந்து பாதாள அறைக்கு மீண்டும் சென்றாா் அத்திவரதா்!

கும்பகோணத்தில் நாளை வரை அத்திவரதா் தரிசனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


