தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி மரணம்
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :25 நவம்பர் 2024, 8:37 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், பழைய கருவாட்சி பகுதியைச் சோ்ந்தவா் பூபதி மகன் செந்தில்குமாா் (45). கூலித்தொழிலாளியான இவா், நவம்பா் 13-ஆம் தேதி பழைய கருவாட்சி மடுவங்கரையில் உள்ள ஆலமரத்தில் தேன் எடுத்தாராம்.
அப்போது, தேனீக்கள் கொட்டியதில் செந்தில்குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்தவா் திங்கள்கிழமை உயிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...