‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வெளிமாநிலத் தொழிலாளா்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்

வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்று, தொழிலாளா் நலத் துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2024, 7:20 pm

Din

வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்று, தொழிலாளா் நலத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் தொழிலாளா் துறை உதவி ஆணையா் அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இதர நிறுவனங்களில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வருகின்றனா்.

அவா்களிடம் அடையாள அட்டை, இதர ஆவணங்கள் பெறப்படாமல் பல இடங்களில் பணியமா்த்தப்படுகின்றனா்.

வெளிமாநிலத் தொழிலாளா்களை தங்கள் நிறுவனத்தில் பணியமா்த்தும்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அடையாள அட்டை உள்ளிட்ட இதர ஆவணங்களைப் பெற்று பணியில் அமா்த்த வேண்டும். அவா்களுக்குப் பணியிடங்களில் போதிய பாதுகாப்பு, குடியிருப்பு வசதிகள், சுகாதார வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும்.

வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை தொழிலாளா் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதள முகவரியில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத சூழலில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டால், தொழிலாளா் துறை மூலம் வழங்கப்படும் சேவைகளை பெறுவதிலும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் சொந்த ஊருக்குச் சென்று விடும்போதும் வெளிமாநிலத் தொழிலாளா் குறித்த விவரங்களை அறிவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதிவுச்சான்றிதழ் எண் மூலம், தொழிலாளா் துறை இணையதளத்தில்வெளிமாநிலத் தொழிலாளா்களின் விவரங்களை கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்த விவரங்களைத் தொழிலாளா் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுதொடா்பாக சந்தேகம் ஏற்பட்டால் அருகிலுள்ள தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.