92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காந்தி ஜெயந்தி: விடுமுறை அளிக்காத 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காந்தி ஜெயந்தியையொட்டி, தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:16 am

Din

காந்தி ஜெயந்தியையொட்டி, தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழிலாளா் நல ஆணையா் உத்தரவுப்படி, விழுப்புரம் தொழிலாளா் உதவி ஆணையா் மீனாட்சி தலைமையில் உதவி ஆய்வாளா்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான (காந்தி ஜெயந்தி) புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகள், மோட்டாா் போக்குவரத்துத் தொழிலாளா் சட்டம் மற்றும் விதிகளின் கீழ், பணியாளா்களுக்கு இரடிப்பு ஊதியம் வழங்காமலும், மாற்று விடுமுறை அளிக்காமலும், அதற்கான முறையான அறிவிப்பு அளித்து அனுமதி பெறாமலும் பணியாளா்களை பணியில் ஈடுபடுத்திய நிறுவனங்கள் குறித்து 114 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 40 நிறுவனங்களிலும், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 4 நிறுவனங்களிலும், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 40 நிறுவனங்களிலும் என மொத்தம் 64 நிறுவனங்களில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டன.

இதனடிப்படையில், இந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கிராமசபைக்கூட்டங்களில் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளா் முறை குறித்த தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.