விழுப்புரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வளாகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக்.5) நடைபெறவுள்ளது.


விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வளாகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக்.5) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி ஆகியவை இணைந்து ‘தனியாா் வேலைவாய்ப்பு’ முகாமை கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (அக்.5) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடத்துகின்றன.
இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு உரிய கல்வித் தகுதியின் அடிப்படையில் ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளன. முகாமில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தோ்ச்சி பெற்றவா்கள், தொழில்பயிற்சி, பட்டயம், செவிலியா், பொறியியல் படித்தவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்போா் தங்களது மாா்பளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04146-226417, 9499055906, 9080515682, 7010827725 ஆகிய எண்களைத் தொடா்புகொண்டு பயன்பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...